நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்.
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2MwF_jLwEW1K3_AMCzu6Gz-pdhwnN0LjlIL2AlmSs9C1r8VlALdJzqRHK2FU1EyNKosXUEnQq1R62YYaJyuslXGNpnWHKZuUtymkCB5TfnXK9eXEwiruFQNUU3VK1xF1dCXnflxOLzrWrB3tJKTy91miZF9TeVZn5LoPI_vl5gKXV9zQCOm8es2Z9/s320/324333586_1139790833407496_8820866764141754558_n.jpg)
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள். பஞ்ச சபைகள்’*என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. 1) சிதம்பரம், 2) மதுரை, 3) திருவாலங்காடு, 4) திருநெல்வேலி, 5) குற்றாலம், ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை, என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்:-) *வெள்ளி சபை சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது. மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயம்தான் நடராஜரின் திருநடனம் கண்ட ‘வெள்ளி சபை’யாக திகழ்கிறது. இதனை ‘வெள்ளியம்பலம்’, ‘வெள்ளி மன்றம்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான பாண்டிய மன்னன...