வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அதிஷ்டம் நிச்சயம்


வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அதிஷ்டம் நிச்சயம்

நமது வீடுகளில் பொதுவாக காலையில் எழுந்து தீபம் ஏற்றி இறைவனை வணங்குவது வழக்கம். அதே போல மாலையிலும் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். நாம் காலையில் தீபம் ஏற்றுகையில் கீழே உள்ள மந்திரம் அதை கூறினான் அது நம்முடைய வழிபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.

இதன் மூலம் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றி கிடைக்க வழிபிறக்கும், அதிஷ்டம் உண்டாகும்.

தீப மந்திரம்:

ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
கிரணோத்கர பாஸ்வா
தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
சுப்ரபாதம் குருஷ்வமே.

பொருள்:

இவ்வுலக மக்களை காத்து, அவர்களுக்கு நல்லறிவை வழங்கக்கூடிய கதிர்களை இவ்வுலகம் முழுக்க பரப்பும் தீபமே. என்னுடைய இந்த நாள் சிறப்பாக இருக்கு உங்களது அருளை வேண்டுகிறேன்.

தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அறிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும். நமக்கு சாதகமாக பல விடயங்கள் நடப்பதை நாமே கண்கூடாக பார்க்கலாம். இந்த மந்திரத்தின் சக்தியானது ஒரு நாள் முழுவதும் நமக்கு வெற்றியை தேடி தரும். ஆனால் இதெல்லாம் ஒரு நாள் ஜபிப்பதால் நடந்துவிடாது. குறைந்தது ஒரு மண்டலமாவது இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வந்தால் அதன் பலனை உணரலாம்.


 

Comments

Popular posts from this blog

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்