சுவாமி ஐயப்பன் வரலாறு பாகம் 11 AYAPPAN HISTORY PART - 11


 சுவாமி ஐயப்பன் வரலாறு 11

*****************

 மணிகண்டன் வருகை தருதல் :  

*****************

மணிகண்டன் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த அடுத்த கணப் பொழுதே, தாய் இருந்த அறையை நோக்கி விரைந்து வந்து அவர்களுக்கு நடக்கும் சிகிச்சையை கண்டுக்கொண்டிருந்தார். பின், அறையின் வெளியே தந்தை மிகுந்த கவலை யுடன் இருப்பதை அறிந்த மணிகண்டன் அவர் அருகில் சென்றார். 

மணிகண்டனும், மகாராஜாவும் ஒன்றிணை ந்த அப்பொழுதே இச்செயலை எடுத்துரைக்க சரியானதாக அமையும் என்று முதலமைச்சர் வைத்தியரிடம் சில செய்கைகளை காட்ட வைத்தியரும் அங்கு கூடி நின்ற மூவருடன் சென்று மகாராணியின் உடல் நிலைகளைப் பற்றி எடுத்துரைக்க தொடங்கினார்.

 வைத்தியர் எடுத்துரைத்தல் : 

*****************

வைத்தியர் ஒருவரிடம் சென்று மகாராணிக்கு ஏற்பட்டுள்ள தலைவலி என்பது சாதாரண தலைவலி அல்ல. மிகவும் கடுமையான உயி ரைக்கொல்லும் வகையிலான தலைவலியா கும். இவ்விதமே விட்டுவிட்டால் மகாராணி விரைவில் நம்மைவிட்டு மறைந்து விடுவார் என்று கூறினார். இதைக் கேட்டதும் மகாராஜா என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். ஆனால், நிகழ்வது யாவற்றையும் மணிகண்டன் அறிந்தவையே. இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் யாவும் தனது பிறப்பின் இலக்கை நோக்கி தன்னை இழுத்துச் செல்வதை நன்கு உணர்ந்தார்.

முதலமைச்சரோ மருத்துவரிடம் ராணிக்கு ஏற்பட்டுள்ள தலைவலியை போக்க வேறு ஏதாவது மாற்று வழி உண்டா? என்பது போல வினவினார். வைத்தியரோ இதற்கான மாற்று வழி உள்ளது என்றும்... ஆனால், அது மிகவும் கடுமையான வழி ஆகும் என்றும்... கூறினார்.

மகாராஜாவும் எவ்வழியாயினும் பரவாயில் லை தாங்கள் உரையுங்கள் என்று தன் மனதி ல் தைரியத்துடன் அவர் கூறுவதை கவனத்து டன் கேட்கத் தொடங்கினார். வைத்தியரோ அவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட சதித்திட்டத்தி ல் கடைசி நிலையை செயல்படுத்தத் தொடங் கினார். அதாவது தன்னிடம் மகாராணியின் தலைவலியை போக்குவதற்கான மூலிகை இருப்பதாகவும் மூலிகைகளை கலப்பதற்கு புலிப்பால் வேண்டும் என்றும், அதுவும் சமீபத் தில் குட்டி ஈன்ற புலியே வேண்டும் என்றும் அந்தப் புலியின் பால் தான் இந்த தலைவலி யை குணப்படுத்தபடும் மூலிகைகளை கலந்து கொள்வதற்கான அருமருந்தாகும் என்று கூறினார்.

 மணிகண்டனின் விருப்பம் : 

*****************

வைத்தியர் கூறியதைக் கேட்டு மிகுந்த அதிர்ச் சிகொண்டார் மன்னர். அதாவது, வனத்திற்கு சென்று புலிப்பால் கொண்டுவர வேண்டும். அதுவும் பெண் புலி வேண்டும் என்பது விளை யாட்டான காரியமே அல்ல. என்பதை உணர்ந் து என்ன செய்வது? யாரிடம் இப்பணியை ஒப்படைப்பது என்று புரியாமல் திகைத்து நின்று என்ன சொல்வது? என்று அறியாமல் ஒருவிதமான மன வருத்தத்துடனும், பதற்றத் துடனும் நின்று கொண்டிருந்தார்.

வைத்தியர் கூறியவற்றை அறிந்த மணிகண்ட ன் தன் தந்தையிடம் தான் வனத்திற்குச் சென்று புலிப்பால் கொண்டு வருவதாகவும், நான் செல்ல எனக்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றார்.

மணிகண்டன் காட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டி தந்தையிடம் நின்று கொண்டே இருக் கும் செய்தியை அறிந்த மகாராணியோ மிகு ந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டாள். தனது திட்டத்தின்படி அனைத்தும் நடப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.

மணிகண்டனின் கூற்றை கேட்ட மன்னரோ சற்று பயம் கொண்டு இல்லை மணிகண்டா. என்று அவர் கண்களை நோக்கும் பொழுது மணிகண்டனின் கண்களில் காணப்பட்ட உறுதியும் மன்னனை மறுத்துப் பேச முடியா மல் அவருக்கு உண்டான அனுமதி அளிக்கும் வகையிலும்... அவரின் பேச்சும் அமைந்தது.

மணிகண்டா, நீ மட்டும் தனியாக வனத்திற்குச் சென்று புலியை வேட்டையாடுவது என்பது உனது உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடக் கூடும். ஆகவே, ஒரு சிறு படையை உன்னிடம் அனுப்பி வைக்கின்றேன். அவர்களைக் கொ ண்டு நீ உனது எண்ணத்தை நிறைவேற்றுவா யாக, என்று கூறினார் பந்தளராஜன்.

ஆனால், மணிகண்டன் தனக்கு எவ்வித படை யும் வேண்டாம். வனத்தில் படைகளின் சத்தம் கேட்டால் புலிகள் யாவும் மிரட்சி அடையும்.ஆக வே, நான் மட்டும் தனியே சென்று புலிகளுடன் வந்து அன்னையை இப்பிரச்சனையிலிருந்து காப்பேன் என்று உறுதியுடன் கூறினார்.

 வனத்திற்கு செல்லுதல் : 

மணிகண்டனிடம் பலவாறு உரைத்தும் அவர் தனியே செல்வதில் விருப்பம் கொண்டார். அவரின் முடிவை மாற்ற இயலாமல் மன்னரும் அவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு வனத்திற்குச் செல்ல அனுமதியளித்தார்





Comments

Popular posts from this blog

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்