சுவாமி ஐயப்பன் வரலாறு பாகம்..8 AYAPPAN HISTORY PART -8


 சுவாமி ஐயப்பன் வரலாறு 8

🌿


*****************
🌿
பிறப்பின் ரகசியத்தை கூறிய மணகண்டன்:
🌿
*****************
🌿

அதை கண்டதும் குருவான முனிவர் மிகவும் மகிழ்ந்து எல்லையற்ற ஆனந்தம் கொண்டார். இவை யாவற்றையும் கண்டு கொண்டிருந்த பாலகனின் தாயானவள் அவ்விடம் வந்து தன் மகனின் பேச்சுக்களைக் கேட்டு பிரபஞ்சத்தில் என்னைவிட எவராலும் இவ்வளவு ஆனந்தம் கொள்ள முடியாது என்ற நிலையில் கண்களி ல் நீர்வழிய மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டு தனது மகனுக்கு பேசும் சக்தி அளி த்த மணிகண்டனை அணைத்த வண்ணம் தன் பிறவிப் பெருங்கடலை அடைந்தார்கள்.
🌿
யாரென்று உணர்தல் :
🌿
****************
ஆனந்த நிலையில் இருந்து இவ்வுலகிற்கு வந்த முனிவரும் மணிகண்டனிடம் யாரப்பா நீ?. உன்னை நான் காணும் போதே கண்டு கொண்டேன். நீ சாதாரணமானவன் அல்ல. என்பதை யார் நீ? என்று கேட்டார்.
🌿
ரகசியம் வெளிப்படுதல் :
🌿
*****************
தனக்கு பல கலைகளைப் பயின்று கொடுத்து தன்னை ஒரு வீரனாகவும், ஒரு கல்வியில் சிறந்தவனாகவும் உருவாக்கிய குருவிடம் தனக்குத் தெரிந்த ரகசியங்களை மறைப்பது என்பது பாவ செயலாகும் என்பதை உணர்ந்த மணிகண்டன் தனக்குத் தெரிந்த ரகசியங்க ளைத் தனது குருவிடம் வெளிப்படுத்தினார்.
குருவே நான் தங்களிடம் கூறும் செய்திகள் யாவற்றையும் தங்களுடனேயே ரகசியமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும் என்றும், இதை எவரிடமும் பகிர்தல் கூடாது என்றும் வேண்டி தனது பிறப்பின் ரகசியங்கள் யாவற் றையும் தனக்கு தெரிந்த அளவில் தனது குருவிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
அதாவது தான் ஒரு அசுரனை வதம் செய்வ தற்காக மட்டுமே இப்பிறப்பு எடுத்துள்ளதாக கூறினார். இச்செய்தியை இந்திரதேவன் தன்னிடம் உரைத்ததாகவும் இதை எவரிடமும் பகிர்தல் கூடாது என்பதையும் எடுத்துரைத் தார். காலம் வரும் போது எனது அவதார நோக்கம் ஈடேறும் என்றும் கூறினார்.
🌿
மக்களின் மகிழ்ச்சி அமைச்சரின் சூழ்ச்சி
🌿
*****************
தனது பிறப்பின் ரகசியங்களை எடுத்துரைத்து குருவிடம் ஆசிப்பெற்று அவ்விடம் விட்டு பிற ந்த இடமான அரண்மனையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார் மணிகண்டன்.
மணிகண்டன் செல்வதை பார்த்த குருவான வர் தன் ஆசிரமத்தை விட்டு ஒரு ஜோதி ரூப மாக செல்வதாக தனது அககண்களில் கண்டு யான் என்ன பாக்கியம் செய்தேன்? என்று தனது மனம் பூரிப்படையும் வகையில் மிகவும் ஆனந்த நிலையில் மகிழ்ச்சி கொண்டார்.
🌿
மணிகண்டனின் வருகை:
🌿
*****************
குருகுலத்தில் தனது கல்வியை முடித்து ராஜ்ஜியத்திற்கு மணிகண்டனின் வருகை தரும் செய்தியை அறிந்த மன்னரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு ராஜ்ஜியம் முழுவதும் அலங்காரங்களுடனும், பலவிதமான இசை முழக்கங்களுடனும் அவரை வரவேற்க காத்து கொண்டு இருந்தார். ராஜ்ஜியம் எங்கும் அவர் வருகையை ஒட்டி அழகிய மலர் அலங்காரங் களுடன் அலங்கரிக்கப்பட்டு கொண்டிருந்தன. மணிகண்டன் வரும்பொழுது பெண்களும், பெரியவர்களும் வரவேற்று கொண்டிருந்தன. படை வீரர்கள் சூழ மணிகண்டன் அரண்மனை யின் நுழைவாயிலை அடைந்து அரண்மனைக் குள் நுழைய முற்படுகையில் அரண்மனையி ல் இருந்த பெண்கள் அவரை மிகுந்த அன்போ டும், பாசத்தோடும் வரவேற்றனர். வயதில் மூத்த பெண்கள் ஆரத்தி எடுத்து பொட்டிட்டு அவரை மிகுந்த அன்போடு வரவேற்றனர்.
மகாராஜாவும், மகாராணியும் மணிகண்டனை மிகுந்த அன்போடு வரவேற்று அவரிடம் தனது சகோதரனையும் காட்டி மிகுந்த ஆனந்தம் கொண்டனர். சிறு வயதில் கண்ட மணிகண் டன் இப்பொழுது மிகுந்த அழகுடனும், தெளிவு டனும் விளங்குவதாக தன் தாய் கூற தந்தை யோ, தனது தாய்க்கு தன் குழந்தை எப்பொழு தும் அழகானவன் தான் என்று சொல்ல கல கலப்பான சூழலில் நிகழ்ச்சியானது அனைவ ருக்கும் ஆனந்தம் அளிக்கும் வகையில் நிறை வுற்றது. ஆனால், ஒருவரைத் தவிர.
🌿
அமைச்சரின் சூழ்ச்சி :
🌿
****************
அரண்மனையில் இருந்த அனைவரும் மணி கண்டனின் வருகையையும், அவரது கல்வி ஞானத்தையும் கண்டு மிகவும் அலாதி மகிழ்ச் சி கொண்டிருந்தனர். ஆனால், முதலமைச்சர் மணிகண்டனை காணும் போதெல்லாம் தனது பதவியானது பறிபோனதே என்ற எண்ணமே... அவருக்கு மேலோங்கத் தொடங்கியது. தான் அரியணை ஏறா விட்டாலும், மணிகண்டன் அரியணை ஏறக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் இந்த எண்ணம் அவரை மாபெரும் பாவச்செயலுக்கு காரணமாக அமைந்தது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌿
நாளை தொடரும்...பாகம்..9
🌿
🌿
ஓம் சுவாமியே சரணம ஐயப்பா..
🌿
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Comments

Popular posts from this blog

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்